வீட்டிலிருந்தபடியே ஆதாரில், மொபைல் போன் எண்ணை அப்டேட் செய்யும் வசதியை, இந்தியா போஸ்ட் பேமன்ட் பேங்க் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய அஞ்சல்துறையின் அங்கமான, இந்தியா போஸ்டல் பேமன்ட் பேங்க், அனைவருக்கும் வங்கி சேவை சாத்தியமாவதற்காக, வீடு தேடி வரும் வங்கி சேவையை வழங்கி வருகிறது.இதன்மூலம், புதிய கணக்கு துவங்குதல், பண பரிமாற்றம், பணம் எடுத்தல், சேமிப்பு திட்டங்களில் பணம் செலுத்தல் என பல்வேறு சேவைகளை, வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தே செய்ய முடியும்.வங்கிகளுடன் ஒப்பிடும்போது, 'டோர் ஸ்டெப் பேங்கிங்' சேவைகளுக்கு, குறைந்தளவு கட்டணமே வசூலிக்கப்படுகிறது. புதிதாக, இந்தியா போஸ்ட் பேமன்ட் பேங்க், ஆதாரில் மொபைல் போன் எண் 'அப்டேட்' செய்யும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
வங்கி வசதி கிடைக்காத கிராம பகுதி மக்களுக்கு, இச்சேவை மிகவும் உதவியாக இருக்கும் என்று, இந்தியா போஸ்ட் பேமன்ட் பேங்க் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும், 650 இந்தியா போஸ்ட் பேமன்ட் பேங்க் கிளைகள் மற்றும் பயோமெட்ரிக், ஸ்மார்ட்போன் வசதி மூலம் வங்கி சேவைகளை வழங்கி வரும், ஒரு லட்சத்து 46 ஆயிரம் தபால்காரர்கள் வாயிலாக, இந்த சேவை வழங்கப்படவுள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.