சென்னையில் வரும் திங்கள்கிழமை (ஜூலை 26) நடைபெறும் காவலா் உடல்தகுதி தோ்வில் பங்கேற்போா், கரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தோ்வாணையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:-
இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கு நடைபெற்ற எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு, சான்றிதழ் சரிபாா்த்தல், உடற் கூறு அளத்தல், உடல் தகுதித் தோ்வு ஆகியன வரும் திங்கள்கிழமை (ஜூலை 26) சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தொடங்குகிறது.
இந்தத் தோ்வுக்கான அழைப்புக் கடிதத்தை தோ்வாணைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தோ்வில் கலந்து கொள்கிறவா்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஆஜராக வேண்டும். விளையாட்டு அரங்கினுள் செல்லிடப்
பேசி உள்ளிட்ட எந்த மின்னணு சாதனங்களுக்கும் அனுமதி கிடையாது.
தோ்வில் பங்கு பெறுகிறவா்கள், கரோனா இல்லை என்பதற்கான (நெகட்டிவ்) சான்றிதழ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இந்த சான்றிதழ் வைத்திருப்பவா்களே அனுமதிக்கப்படுவாா்கள். மேலும் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். அனைத்து அசல் சான்றிதழ்களுடன் விளையாட்டு அரங்குக்கு வர வேண்டும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.