''தமிழகத்தில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க அரசு ஆலோசித்து வருகிறது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
சென்னை, முகப்பேர் கிழக்கில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், 5,000 சதுரடி பரப்பில் 48 வகையான 1,000 மரக்கன்றுகளுடன், 'உயிர்க்கோள்' அடர்வனம் அமைக்கப்
பட்டுள்ளது.
இதில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பங்கேற்று, ஆயிரமாவது மரக்கன்றை நட்டார். அதைத் தொடர்ந்து, 'கல்வி - 40' என்ற செயலியின் செயல்பாட்டை துவக்கி வைத்தார்; புதிதாக அமைக்கப்பட்ட திறன் வகுப்பறையையும் திறந்து வைத்தார்.பின், அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம். அரசு பள்ளி களின் தரம் மேம்படுத்தப் படும். அரசு பள்ளி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், பாரபட்சமின்றி அகற்றப்படும்.
கொரோனா மூன்றாவது அலை என்ற அச்சத்தை கடந்து, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, அரசின் சுகாதார வழிகாட்டுதல்படி, பள்ளிக்கு அனுப்ப முன் வர
வேண்டும். பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விரைவில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, பள்ளிகளை திறக்க ஆலோசித்து வருகிறோம்.
'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெற, தமிழக அரசு முயற்சித்து வருகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் உள்ள குழப்பத்தை நீக்க, தேவையான மாற்றங்களை செய்யவும் அரசு ஆலோசித்து வருகிறது.கொரோனா முழுமையாக கட்டுக்குள் வந்த பின், தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்.இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், அம்பத்துார் எம்.எல்.ஏ., ஜோசப் சாமுவேல், எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் செந்துார் பாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.