ஜப்பானின் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. பெண்கள் ‘வெல்டர் வெயிட்’ பிரிவில் (64–69 கிலோ) இந்தியாவின் 23 வயது வீராங்கனை லல்வினா போர்கோஹெய்ன், சீன தைபேயின் சென் சின்னை 24, எதிர்கொண்டார். முதல் சுற்றில் லவ்லினா 3–2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
சென், சின்னை விட சற்று உயரம் அதிகமாக இருந்த லவ்லினா, இம்முறை சரமாரி குத்துக்களை விட்டார். ஐந்து நடுவர்களும் சாதகமாக புள்ளிகள் வழங்க, இரண்டாவது சுற்றை 5–0 என வென்றார். மூன்றாவது சுற்றிலும் மிரட்டிய இவர் 4–1 என வசப்படுத்தினார். மூன்று சுற்று முடிவில் லவ்லினா 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதில் ‘உலக சாம்பியன்’ துருக்கியின் புசானெசை ஆக. 4ல் சந்திக்கவுள்ளார்.
பதக்கம் உறுதி
குத்துச்சண்டை போட்டிகளை பொறுத்தவரையில் அரையிறுதிக்கு முன்னேறினால் குறைந்தபட்சம் வெண்கல பதக்கம் வழங்கப்படும். இதன் படி இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கத்தை உறுதி செய்ய உற்சாகத்தில் லவ்லினா, மேடையில் ஆர்ப்பரித்தார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.