மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அறிவித்தபடி, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 30) பிற்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 99.37% பேர் தேர்ச்சி அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேர்வு முடிவுகள்
கடந்த மே மாதம் 3 ஆம் தேதி முதல் நடத்தப்பட வேண்டிய CBSE 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கொரோனா 2 ஆம் அலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு இறுதி முடிவுகளை ஜூலை 31 ஆம் தேதிக்குள் வெளியிடுவதாக மத்திய இடைநிலை கல்வி (CBSE) அறிவித்தது. அதன்படி இன்று (ஜூலை 30) பிற்பகல் 2 மணியளவில் CBSE 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னமே அறிவித்திருந்தபடி, CBSE தேர்வு முடிவுகள், கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான CBSE 12ம் வகுப்பு தேர்வில் 99.37% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதாவது 99.13% மாணவர்கள் மற்றும் 99.67% மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 17,016 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் 99.92% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக 5.37% மாணவர்கள் 95% மதிப்பெண்களை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாணவர்களுக்கான முடிவுகள், மாற்று மதிப்பீட்டுக் கொள்கையின் அடிப்படையில் அவர்கள் பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், அதாவது 30:30:40 என்ற வகையில் கணக்கிடப்பட்டு இறுதி முடிவுகள் வெளியானது. இந்த தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதத்தில் முதல் சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட்டு, அந்த மதிப்பெண்கள் இறுதியானதாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.