தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை பாதிப்பு குறைந்து வந்து கொண்டிருந்தாலும் கோவை, ஈரோடு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் மீண்டும் உயர்ந்து வருகிறது. அதனால் மற்ற மாநிலங்களை போலவே தமிழகத்திலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.
நாடு முழுவதும் பெருந்தொற்றாக உருவெடுத்த கொரோனா உயிர்கொல்லி நோய் தாக்கத்தினால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து மாநிலங்களும் முடக்கப்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா முதலாம் அலை பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வந்ததால், பொதுமக்கள் சற்றே இயல்பு நிலைக்கு வர துவங்கினர். இதனிடையே மீண்டும் வேகமெடுத்த கொரோனா 2 ஆம் அலையால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
ஆனால் இம்முறை நாடு தழுவிய பொது முடக்கமாக அமல்படுத்தப்படாமல், மாநிலங்கள் தோறும் பதிவு செய்யப்பட்டு வந்த கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. தமிழகத்தை பொருத்தளவு கடந்த மே மாதம் முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா புதிய பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வந்ததால் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை தாக்கம் தற்போது துவங்கியுள்ளதால், இது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் உச்ச நிலையை அடையும் என மருத்துவர்கள் கணித்துள்ளனர். அதற்கு ஏற்றாற்போல தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தினசரி புதிய பாதிப்புகள் 22 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதே போல சில வட மாநிலங்களிலும் கொரோனா புதிய பாதிப்புகள் சற்று உயர்ந்துள்ளது.
தமிழகத்தை பொருத்தளவு தற்போது ஆயிரமாக பதிவு செய்யப்பட்டு வரும் புதிய பாதிப்புகள் கடந்த 2 நாட்களாக சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் சற்று உயர்ந்துள்ளது. அதாவது சென்னையில் 122 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 164 ஆகவும், கோவையில் 164 லிருந்து 179 ஆகவும், ஈரோட்டில் 127 லிருந்து 140 ஆகவும் அதிகரித்துள்ளது. இருப்பினும் மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே தமிழகத்தில் ஒருவேளை 10 சதவீதத்திற்கும் அதிகமாக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதே போல கேரளா, மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டுமாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அம்மாநிலங்களில் மத்தியக் குழு அனுப்பப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.