பிளஸ் 2 மாணவர்களின் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு (மேம்பாட்டுத் தேர்வு) முடிவுகள் வெளியிடப்படும் வரை மாணவர் சேர்க்கைப் பட்டியலை இறுதி செய்யப் பல்கலைக்கழகங்களுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால், நடப்புக் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு ஜூலை 31ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் ஜூலை 19-ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டது. ஜூலை 22-ம் தேதி மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டன. இதில் திருப்தி அடையாத மாணவர்கள் விரும்பினால் கூடுதல் மதிப்பெண்கள் பெற இம்ப்ரூவ்மென்ட் தேர்வு (மேம்பாட்டுத் தேர்வு) நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, இந்த இம்ப்ரூவ்மென்ட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை மாணவர் சேர்க்கைப் பட்டியலை இறுதி செய்ய அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தடை விதிக்கக் கோரி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், தற்போது வெளியிடப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அடிப்படையில் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை நடத்தினால், கூடுதல் மதிப்பெண் பெறத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வு, வெறும் ஊகத்தின் அடிப்படையில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கைத் தொடர மனுதாரருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனவும் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.