சிவில் சர்வீஸ் தேர்வுகள் - 2019 தேர்வர்களுக்கான ஆளுமைத்திறன் தேர்வு, 20 ஜூலை 2020 முதல் நடைபெறும்.
கோவிட்-19 காரணமாக நிலவும் சூழ்நிலைகள் குறித்துp பரிசீலனை செய்வதற்காக சிறப்புk கூட்டம் ஒன்றை மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (UPSC) இன்று நடத்தியது. மத்திய அரசும் பல்வேறு மாநிலங்களும் அறிவித்துள்ள பொதுமுடக்கம் நீக்கப்படுதல் மற்றும் தளர்வுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தேர்வுகள்/ நியமனத் தேர்வுகள் ஆகியவற்றுக்கான திருத்தியமைக்கப்பட்ட அட்டவணையை வெளியிட ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்வுகள் நேர்முகத்தேர்வுகள் இவை பற்றிய திருத்தியமைக்கப்பட்ட அட்டவணை விவரங்கள், யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வு, 2019 எழுதிய, எஞ்சியுள்ள தேர்வர்களுக்கான ஆளுமைத்திறன் தேர்வுகள் 20 ஜூலை 2020 முதல் நடைபெறும். தேர்வர்களுக்கு தனித்தனியாகவும் தகவல் தெரிவிக்கப்படும்.
ஊழியர் சேமநல நிதி அமைப்புக்கான EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நியமனத் தேர்வுக்கான புதிய தேதி ஆணையத்தின் இணையதளத்தில் 2021 தேர்வுகள்/ நியமனத் தேர்வுகள் ஆகியவற்றுக்கான அட்டவணை வெளியிடப்படும் போது சேர்த்து வெளியிடப்படும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.