ஆன்லைன் மூலம் பாதுகாப்பான கல்வி கற்பது குறித்த விழிப்புணர்வை
மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே அதிகரிக்கும் வகையில், ‘’ கொவிட்-19 காலகட்டத்தில் பாதுகாப்பான ஆன்லைன் கற்றல்’’ என்னும் தலைப்பிலான தகவல் கையேட்டை புதுதில்லியில் இன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தொடங்கி வைத்தார். இந்தக் கையேட்டை, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (NCERT) மற்றும் யுனெஸ்கோவின் புதுதில்லி அலுவலகம் உருவாக்கியுள்ளன. இந்தக் கையேடு, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான ஆன்லைன் அடிப்படையான எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதைப் போதிக்கும். இது பெற்றோருக்கும், கல்வி கற்பிப்பவர்களுக்கும் குழந்தைகள் எவ்வாறு இணையதளத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பதைக் கற்பிக்க உதவும்.
கையேட்டை வெளியிட்டுப் பேசிய திரு. ரமேஷ் பொக்ரியால், ‘’ கொவிட்-19 சூழலில், ஆன்லைன் மற்றும் தொலைதூரக் கல்வியில் ஆர்வம் பெரிதும் அதிகரித்துள்ளது. ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்தும் பல குழந்தைகளும், ஆசிரியர்களும் ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டிக் கொள்கின்றனர். இந்திய அரசின் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உறுதி பூண்டுள்ளன. வீடுகளில் இருந்தவாறே, ஆன்லைன் மூலம் பாதுகாப்பான கல்வியை கற்க இது வகை செய்கிறது. இணையவெளித் தவறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் புகார் தெரிவித்து ,ஆதரவைப் பெறுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலும், யுனெஸ்கோவும் கூட்டாக இந்தக் கையேட்டைத் தயாரித்திருப்பது குறித்து அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வை அதிகரிக்கவும், இணையவெளி குற்றங்களுக்கு உரிய நேர நடவடிக்கையை உறுதி செய்யவும் உதவும்’’
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.