அதிகளவில் காபி குடித்தால் ஏற்படும் 7 தீமைகளும்? பக்க விளைவுகளும்?
சிலருக்கு காபி குடிக்கவில்லை என்றால் தலைவலி மண்டையை உடைத்து விடுகின்றது என்பார்கள். காபியை அடிக்கடி அன்றாடம் குடிப்பவர்களுக்கு இருதய படபடப்பு, தூக்கமின்மை இவையெல்லாம் ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் முடிந்தால் காபியினை தவிர்த்து விடுங்கள் என்றே அறிவுறுத்தப்படுகின்றது.
காபி, டீ, கோகோ இவைகளில் காபின் என்ற பொருள் உள்ளது. இது சக்தியினை தூண்டி விடும் பொருள். காபியினை நிதான அளவில் குடிப்பவர்களுக்கு நடுக்குவாதம் எனப்படும் parkinsons நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைவு என்றே ஆய்வுகள் கூறுகின்றன.
அதே போல் அளவான காபி அருந்துபவர்களுக்கு மறதி நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. சில ஆய்வுகள் காபின் மூளை வீக்கத்தினைக் கூட தவிர்க்கின்றது என்று கூறியுள்ளன. வீக்கமே பல நோய்களுக்கு காரணம் எனப்படும் நிலையில் காபீனில் உள்ள அமினோ அமிலங்கள் வீக்கங்களை குறைக்க உதவுவதாகவே சமீபத்திய ஆய்வு கூட கூறுகின்றது.
காபி குடிக்காவிட்டால் வேலையே செய்ய முடியாது என்று பலர் சொல்வதுண்டு. காபி நம் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
"அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு" என்பதற்கேப்ப அதிகமாக காபி குடிப்பது பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
காபி நுகர்வு இரத்த அழுத்தத்தை உயர்த்தும்.
குறிப்பாக ஏற்கனவே உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுவாக காபி உட்கொள்ளாதவர்கள் குடித்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்குமாம்.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு 250mg காபி வழங்கப்பட்டது, காபி குடித்ததற்கு பிறகு சுமார் 2-3 மணி நேரம் பிறகு அவர்களின் இரத்த அழுத்தம் உயர்த்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
அதிகளவில் காபி குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி பார்ப்போம்
உறங்கும் நேரத்தில் காபி குடித்தால் தூக்கமின்மையை உண்டாக்குகின்றன.
ஒரு நாளைக்கு 4 கப் காபிக்கு மேல் குடிப்பது ஆயுள் காலத்தை குறைக்குமாம்.
காபி அஜீரணத்தை ஏற்படுத்துகின்றது.
காஃபினேட்டட் (caffeine) பானங்களை உட்கொள்பவர்கள் பெரும்பாலும் வயிற்றுப்போக்கு அல்லது அஜீரணத்தைப் பற்றி தெரிவிக்கின்றனர். வெறும் வயிற்றில் பானங்கள்(காபி) உட்கொள்ளும்போது முக்கியமாக நிகழ்கிறது.
காபி தலைவலியை ஏற்படுத்தும்.
காபி அளவாக குடிக்கும் போது தலைவலி அறிகுறிகளைப் போக்கும், காபி அதிகமாக குடிப்பது ஒற்றைத் தலைவலிக்கு வழிவகுக்குமாம்.
காபி குடிப்பது உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கு பங்களிக்கின்றது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.