ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 16-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களின் திறப்பு தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டே இருக்கும் சூழலில், தனியார் பள்ளிகள் சார்பில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே மழலையர் வகுப்புகளுக்கும் ஆரம்ப வகுப்புகளுக்கும் கூட ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு ஆன்லைன் கல்வி சாத்தியமில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. பல மணி நேரம் தொடரும் ஆன்லைன் வகுப்புகளுக்குக் கல்வியாளர்களும் பல்வேறு ஆசிரியர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அவை முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகப் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதல்வரின் ஒப்புதல் கிடைத்த பிறகு இதுகுறித்த நெறிமுறைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதில், எந்தெந்த வகுப்புகளுக்கு ஆன்லைன் கல்வியைக் கற்பிக்கலாம், எத்தனை மணி நேரம் எடுக்கலாம்? எந்த வயது வரை ஆன்லைன் வகுப்புகள் கூடாது? என்பன குறித்த விவரங்கள் வரையறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.