வெற்றிலை போடுவதால் உண்டாகும் நன்மைகள்!
நமது முன்னோர்கள் எதையும் ஒரு காரணத்துடன் சொல்லி விட்டு தான் சென்றுள்ளனர்.
தமிழர்கள் பல சடங்குகளை தங்களது ஆரோக்கியத்திற்காக கடைபிடித்து வருகின்றனர்.
இதில் எதுவுமே மூட நம்பிக்கைகள் அல்ல. அவை ஒவ்வொன்றிற்கு பின்பும் ஒரு மருத்துவ காரணம் இருக்க தான் செய்கிறது.
நமது முன்னோர்கள் வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகளை மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும்
நல்ல காரியங்களும் அதில் அடங்கியுள்ளன.
இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரிவதில்லை.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு
பொதுவாக வெற்றிலை பாக்கு,
சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது
அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
நோய் ஏன் வருகிறது?
சித்தவைத்தியத்தின் படி மனிதர்களுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்கும் போது
வாதம், பித்தம், கபம் (சிலேத்துமம்)" போன்றவைகள் சரியான விகிதத்தில்
இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறதாம்.
இது முற்றிலும் சரியான காரணமாகும்.
தடுப்பாற்றால்
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை
கட்டுப்படுத்தும், சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது.
வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விடும்.
எலும்பு முறிவு [ calcium rich ] [ joint pain ] [back pain ]
இன்று 30 வயதிற்கு மேல் ஆனாலே எலும்புகள் வலுவிழந்துவிடுகிறது .
இப்போது வயதானவர்களுக்கு எலும்புகள் எளிதில் உடைந்து விடும்
அபாயம் அதிகமாக உள்ளது. இந்த சாதாரண எலும்பு முறிவு பல
நேரங்களில் வயதானவர்களுக்கு மரணத்தை பரிசாக தந்தது.
ஆனால் அந்த காலத்தில் வெற்றிலை போடும் பழக்கத்தால்,
வயதனாவர்களுக்கு எலும்புகள் வலிமையாக இருந்தது.
ஜீரண சக்தி
வெற்றிலையை வாயில் இட்டு மெல்லுவதால்,
ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. ஜீரண மண்டலம் நன்றாக
செயல்பட்டால் பல நோய்கள் நம்மை அண்டாது. இதற்கு தான் விருந்துகளை
முடித்ததும் வெற்றிலை போடும் பழக்கம் நமது மரபில் உள்ளது.
வெற்ற்றிலை பாக்கு போடும் முறை :
காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் வெற்ற்றிலை பாக்கில்
பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.
காரணம் மதிய நேரம்
வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல்
அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு
சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை
அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக
எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில்
தான் வெற்ற்றிலை பாக்கு தரிக்க வேண்டும். இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.