புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.
அதன்படி, தமிழகம், புதுச்சேரி, கேரளத்துக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமைத்தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் கேரளத்தில் 140 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த மூன்று மாநிலங்களிலும்,
வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கும்.
வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 19 கடைசி நாள்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 20-ஆம் தேதி நடைபெறும்.
வேட்பு மனுவை திரும்பப் பெற மார்ச் 22 கடைசி நாள்.
ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.
மே 2-ஆம் தேதி மூன்று மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
அசாம் சட்டப்பேரவைத் தேர்தல்
அசாம் மாநிலத்துக்கு 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.
மார்ச் 27-ல் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 1-ம் தேதியும், மூன்றாம் கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று கட்டமாக நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 2-ஆம் தேதி எண்ணப்படும். அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு
மேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும், கேரளத்தில் 140 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளிலும், அசாமில் 126 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவுள்ளது.
அதில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27-ஆம் தேதியும்
இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 1-ஆம் தேதியும்
மூன்றாம் கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதியும்
நான்காம் கட்டமாக ஏப்ரல் 10-ஆம் தேதியும்
ஐந்தாம் கட்டமாக ஏப்ரல் 17ஆம் தேதியும்
ஆறாம் கட்டமாக ஏப்ரல் 22-ஆம் தேதியும்
ஏழாம் கட்டமாக ஏப்ரல் 26-ஆம் தேதியும்
எட்டாவது மற்றும் இறுதி கட்டமாக ஏப்ரல் 29-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கையானது, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறம் ஐந்து மாநிலங்களிலும் மே 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.