நாம் சில பொருட்களை தானம் கொடுத்தால் அதனால் வர கூடிய நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்ளுங்கள்.
தர்மம் தலை காக்கும் என்பார்கள். தானம் கொடுப்பதால் நம் பாவங்கள் குறையும். வாழ்விற்கான அர்த்தம் கிடைக்கும். தானம் கொடுப்பது ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய ஒரு நல்ல விஷயம். அப்படி தானம் கொடுப்பதற்கு முன் எந்த பொருட்களை எல்லாம் தானமாக வழங்கக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். சில பொருட்களை தானமாக கொடுத்தால் அந்த தானத்தால் வரக்கூடிய நன்மையை விட கஷ்டம் தான் மேலும் அதிகரிக்கும்.
கிழிந்த துணிகள்:
கிழிந்த துணிகளை தானமாக வழங்குவதால் நம்மை துரதிர்ஷ்டம் துரத்தும்.
அதே போல் உடைந்த பொருட்களை தானமாக வழங்குவதும் மிகவும் தவறு. துடைப்பத்தைத் தானமாக வழங்குவது நம் வீட்டு செல்வத்தை வழங்குவதற்கு சமம். அதாவது நம் வீட்டு லட்சுமி தேவியை கொடுப்பது போன்றது. எனவே வீட்டில் நிதி ரீதியான பிரச்னைகள் கொண்டு வரும்.
பிளாஸ்டிக் பொருள் :
நாம் தானமாக வழங்கும் பொருட்களில் நெகிழி பொருள் இல்லாமல் இருப்பது நல்லது. பிளாஸ்டிக் இந்த மண்ணை கெடுப்பது போல, நாம் வழங்கக்கூடிய தான பொருளில் நெகிழி பொருட்கள் இல்லாமல் வழங்குவது அவசியம். அது நம் வாழ்வில் வளர்ச்சிக்கு தடை விதிப்பது போன்றதாகும்.
கூர்மையான பொருட்கள்:
கூர்மையான பொருட்களான கத்திரி கோல், கூர்மையான கத்தி, ஊசி போன்ற பொருட்களை ஒருவருக்கு தானமாக வழங்கினால் வீட்டில் துரதிர்ஷ்டம் வரக்கூடும்.
அன்னதானம் செய்யுங்கள்:
பொதுவாக பேருந்து, ரயில் நிலையங்களில் சிறார்கள், முதியோர்கள் பிச்சை எடுப்பதைப் பார்த்திருப்பீர்கள். அது போன்ற நபர்களுக்கு முடிந்தளவு காசு கேட்டால் கொடுக்காமல், உங்களால் முடிந்தளவு அவர்களுக்கு ஒருவேளை உணவு வாங்கிக் கொடுப்பது மிகவும் புண்ணியத்தைத் தரும். தானத்தில் சிறந்தது அன்னதானம். ஆனால் பழைய உணவுகளை தானமாக வழங்குவது மிகவும் தவறும்.
அது நம் வருமானத்திற்கு அதிகமான செலவை கொண்டு வரும். எனவே ஒருபோதும் பழைய உணவுகளை தானமாக வழங்காதீர்கள். திருமண நாள், பிறந்த நாள், பெரிய பண்டிகை சமயங்களில் தேவையற்ற பெரிய செலவுகளை செய்வதற்கு பதிலாக, அந்த செலவுகளைக் கட்டுப்படுத்தி அந்த பணத்தை அனாதை இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவளியுங்கள். ஏழைகளுக்கு உணவளிக்கலாம். இல்லாத ஒருவருக்கு அவர்களின் வயிறாரஉணவளிப்பதால் அவர்கள் வாழ்த்தும் வாழ்த்து உங்களை வாழ வைக்கும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.