'அரசு ஊழியர்களின் கோரிக்கை: தி.மு.க., ஆட்சியில் நிறைவேறும்'
அரசு ஊழியர்களின் கோரிக்கை, விரைவில் அமைய உள்ள, தி.மு.க., ஆட்சியில் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
இரட்டை வேடம் போடும், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையிலான அ.தி.மு.க., அரசு, தேர்தல் காலம் நெருங்கி வருவதால், தான் போட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக ஒருபுறம் நாடகமாடுகிறது. மற்றொரு புறம் உரிமைக்காகப் போராடுவோரை கைது செய்து, கொடுமைப்படுத்தும் படலம் அரங்கேறுகிறது.
காத்திருப்பு போராட்டம்
கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள், தங்களுக்கான காலமுறை ஊதியம், பணிக்கொடை, குறைந்தபட்ச ஓய்வூதியம், அரசு ஊழியராக்குதல் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.
அவர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காமல், கைது நடவடிக்கையை மேற்கொண்டது கண்டனத்துக்குரியது. உரிமை போராட்டம் நடத்துவோருக்கு அன்பான ஒரு வேண்டுகோள். செவிமெடுக்காத, அ.தி.மு.க., அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒத்தி வையுங்கள்.
உங்கள் கோரிக்கைகள் விரைவில் அமைய உள்ள, தி.மு.க., ஆட்சியில் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.