இதை பல ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன. ஆனால், இதற்கு ஆய்வு எல்லாம் தேவையில்லைங்க.. நீங்களும் நானுமே இதற்கு பல சாட்சிகளாக இருப்போம்.
வாருங்கள் அப்படி என்னத்தான் சொல்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள் என்று பார்க்கலாம்.
அதாவது, மனமுடைந்து காணப்படும் போது, கோயிலுக்கோ, அமைதியாக தியானம் செய்யவோ போவது ஒரு வழியில் நல்லது என்றாலும், உங்கள் மனநிலையை அப்படியே மாற்றிவிடும் வாய்ப்பு குறைவு. எனவே உங்களுக்குப் பிடித்த நண்பர் அல்லது வாழ்க்கைத் துணையுடன் அல்லது தனியாக ஷாப்பிங் சென்று விடுங்கள்.. இதுதான் அந்த நல்ல யோசனை.
உங்களுக்கு மிகவும் பிடித்த அல்லது வாங்க வேண்டும் என்று வெகு நாள்களாக நினைத்துக் கொண்டிருந்த, அல்லது வாங்காமல் இருப்பதால் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பொருள்களை பட்டியலிட்டுக் கொண்டு கிளம்பி விடுங்கள்.
இது குறித்து மார்க்கரட் மெலோய் மற்றும் செலின் அதாலே ஆகியோர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், உங்கள் மனநிலையை உற்சாகக் கடலில் ஆழ்த்தும் திறன் இந்த பல பொருள்களை பார்த்தும் வாங்கும் போது அதிகரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இது மட்டுமல்ல, வீட்டுக்குத் தேவையான ஏதோ ஒரு பொருளை வாங்கும்போது, ஒரு கடைக்குச் சென்று என்னென்ன வாங்க வேண்டும், அதனை எங்கு வாங்க வேண்டும், எப்படி வாங்க வேண்டும் என யோசித்து அதில் ஒரு நல்ல முடிவு கிடைத்து, நல்ல பொருளை வீட்டுக்கு வாங்கி வரும் போது உங்களுக்கே உங்கள் மீது ஒரு நல்ல மதிப்பு வரும், ஒரு தன்னம்பிக்கை பிறக்கும்.
வெகு நாளாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த பொருளை வாங்கி வரும் போது நிச்சயம் மகிழ்ச்சி ஏற்படும். அதனைப் பயன்படுத்தும் போது மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
அப்போது நீங்கள் எதை நினைத்து இத்தனை காலம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ, அழுது கொண்டிருந்தீர்களோ அது சிறியதாகவும் போகலாம். வேண்டாத வேலையாகக் கூட மாறலாம். யாருக்குத் தெரியும்.
நீங்கள் கடை வீதிக்குச் சென்று வாங்குவது மிகச் சிறிய பொருளாகவும் இருக்கலாம், கார், வைர மோதிரம் போன்ற பெரிய பொருளாகவும் இருக்கலாம். அது அது அவரவர் பணப்பையின் கனத்தைப் பொருத்தது.
ஆனால் தயவு செய்து கடன்வாங்கி இதையெல்லாம் வாங்கிவிடாதீர்கள். அப்புறம் கடனிலிருந்து மீள்வது எப்படி, அந்த மனக்கஷ்டத்தை போக்குவது எப்படி என்று மற்றொரு கட்டுரையைப் படிக்க வேண்டியதிருக்கும். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.