தமிழக இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்தில் வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.
அதில், எல்ஐசி மற்றும் யுனைடட் காப்பீடு இந்தியா திட்டத்துடன் இணைந்து ஏழை மக்களுக்கு புதிய காப்பீடு திட்டம் துவக்கப்படுகிறது.
இதற்கான செலவுத் தொகையை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும்.
தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் குடும்பத்தின் தலைவர் விபத்தில் மரணமடைந்தால், அவரது குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், இந்த காப்பீட்டுத் திட்டத்தின்படி, தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் குடும்பத்தின் தலைவர் விபத்தில் நிரந்தர ஊனமடைந்தால் ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.