ஆசிரியர்களின் உயர்கல்விக்கு அனுமதி பள்ளி கல்வி அதிகாரிகள் நடவடிக்கை
பகுதி நேரமாக படித்த ஆசிரியர்களுக்கு, உயர்கல்விக்கான அனுமதியை வழங்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தாங்கள் பணியில் சேரும் போது பெற்ற கல்வி தகுதியை அதிகரிக்கும் வகையில், மேற்படிப்பு படிக்கலாம். இதற்கு தங்களின் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும்.அனுமதி பெறாமல் படித்த ஆசிரியர்களின் கல்வி தகுதியை, அவர்களின் பணி பதிவேட்டில் சேர்க்கவோ, பதவி உயர்வு மற்றும் உயர்கல்விக்கான சம்பள உயர்வுக்கு வழங்கவோ அனுமதி இல்லை.
இந்நிலையில், 2010 முதல் உயர்கல்வி படிப்புக்கான அனுமதி கேட்டு, நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பள்ளி கல்வித்துறையில் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தன.இது குறித்து, நம் நாளிதழில் இரண்டு முறை செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, உயர்கல்விக்கான அனுமதிக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, உரிய பதிலளிக்கப்பட்டு வருகிறது.
உயர்கல்விக்கான அனுமதி விண்ணப்பங்கள் மீது உரிய முடிவு எடுத்து, கோப்புகள் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இணை இயக்குனர் பொன்னையாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதன்படி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள், 57 பேர், பகுதி நேர மற்றும் மாலை நேர உயர்கல்வி முடித்ததற்கு அனுமதி பெற்றுள்ளனர்.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.