சுவாசத் தொற்றுகளை குணப்படுத்தும் அஸ்வகந்தா!
அஷ்வகந்தாவின் அழற்சி நீக்கும் தன்மை இதய நோய்களை குணப்படுத்த உதவுகிறது. இதய தசைகளை வலிமை படுத்துகிறது. கொழுப்பை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அஸ்வகந்தாவின் முழுச்செடியுமே மருத்துவப் பயன்கள் கொண்டது. வட மொழியில் அஸ்வகந்தா எனவும், தமிழகத்தில் இதன் பெயர் அமுக்கிரா கிழங்கு என்றும்
அழைக்கப்படுகிறது. அஷ்வகந்தாவிற்கு பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை உள்ளது. இதானால் இது யூரினல் இரைப்பை-குடல் மற்றும் சுவாச தொற்றுகளை குணப்படுத்த பயன்படுத்த படுகிறது. அஸ்வகந்தாவில் மன அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி உள்ளது. நமக்கு ஏற்படும் பதற்றத்தினாலும், மன அழுத்தத்தினாலும் மனசோர்வு, உடல் சோர்வு ஏற்படும். அந்த சோர்வினை நீக்கி புத்துணர்ச்சியை அளிக்கிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பி அதிகரிக்க, இந்த அஸ்வகந்தா கிழங்கு பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மூட்டு வீக்கம், மூட்டுகளில் வலி இதில் பாதிக்கப்பட்டவர்கள் அஸ்வகந்தாவை பயன்படுத்தினால் மூட்டில் உள்ள வலி குறைகிறது. புற்றுநோயியலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மூலிகை இது. இதற்கு புற்று நோய் செல்களையும், புற்றுநோய் கட்டிகளையும் அழிக்கும் தன்மை உள்ளது. இது உடலை கீமோதெரபியின் பக்க விளைவுகளிலிருந்து காக்கிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.