2020-2021 – ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு , அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு | மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணவர்களது விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து , தேர்வுக் கட்டணத்தினை செலுத்துவதற்கு 01.022021 முதல் 22.02.2021 வரையிலான நாட்கள் வரை பள்ளிகளுக்கு ஏற்கனவே கால அவகாசம் வழங்கப்பட்டது . இந்நிலையில் , புதிதாக தரம் உயர்த்தப்பட்ட / புதிதாக அங்கீகாரம் வழங்கப்பட்ட பள்ளிகளில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் , பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு பயிலும் பள்ளி மாணவர்கள் பெயர்பட்டியல் தயாரிக்கும் பணியினை மேற்கொள்ள வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி சில முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இருந்து கோரிக்கை பெறப்பட்டுள்ளது.
எனவே , பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு மாணாக்கரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கும் , இணையதளம் மூலம் தேர்வுக்கட்டணத்தினை செலுத்துவதற்கும் 24.02.2021 முதல் 25.02.2021 வரையிலான நாட்கள் வரை கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதுவே , பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணிக்காக வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும் . இதன்பின்னர் , இப்பணிக்காக எக்காரணம் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது . எனவே , அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் , தங்களது ஆளுகைக்குட்பட்ட உயர்நிலை | மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும் , பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணியினை 25.02.2021 -க்குள் நிறைவு செய்வதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.