சிறப்பு ரயில்களாக இயக்கப்படும், குறுகிய தொலைவு பயணியர் ரயில்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், 'தேவையில்லாத பயணத்தை தடுக்கவே, கட்டணம் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என, ரயில்வே கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலின்போது, நாடு முழுதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டபோது, சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. முதலில் நீண்ட துார ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. தற்போது, குறுகிய தொலைவு ரயில்களும், சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன. இந்த குறுகிய தொலைவு சிறப்பு ரயில்களுக்கானகட்டணம் அதிகமாக உள்ளதாக, பல்வேறு தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது.
ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள விளக்கம் : கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும்தொடர்கிறது. சில மாநிலங்களில் திடீரென உயர்ந்துள்ளது. இந்த நிலையில், வீண் ரயில்பயணத்தை தடுக்கவே, சற்று கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மெயில் மற்றும்எக்ஸ்பிரஸ் ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கான கட்டணம், இந்த சிறப்பு ரயில்களுக்கு வசூலிக்கப்படுகிறது. தேவையில்லாத பயணத்தை தவிர்க்கவும். இவ்வாறு, அதில்கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.