வயது வேறுபாடின்றி, இணையதளத்தை இன்று பலரும் பயன்படுத்துகின்றனர். ஆனால், ஆன்லைனை பாதுகாப்பாக பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு இருப்பதில்லை. கல்வியறிவு உள்ளவர்கள், இல்லாதவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் ஏராளமான வசதிகள் இருந்தாலும், அதற்கு இணையாக ஆபத்துகளும் உள்ளன. இதுகுறித்து அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், இன்று காலை, 10:30 முதல் 12:00 மணி இலவச விழிப்புணர்வு வெபினார் நடக்க உள்ளது.இதில், குழந்தைகள், மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்.
ஆன்லைனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி; சைபர் கிரைம், ஹேக்கிங் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி; சோசியல் மீடியாக்களை பயன்படுத்துவது எப்படி என்பதை நிபுணர்கள் விளக்குகின்றனர். ஆன்லைனில் இடையிடையே வரும் போலி விளம்பரங்களால் வரும் ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி; சைபர் குற்றங்கள் குறித்து முறையிட யாரை அணுகுவது; வங்கி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்வது எப்படி உட்பட, பல்வேறு சந்தேகங்களுக்கும் நிபுணர்கள் பதில் அளிக்கின்றனர்.
கேள்விகளை பதிவு செய்யுங்கள்!
சைபர் பாதுகாப்பு குறித்த உங்களது சந்தேகங்களை, https://kalvimalar.dinamalar.com/online-seminar/ இணையதளத்தில் பதிவு செய்யலாம். அவற்றிற்கு, ஐ.பி.எஸ்., அதிகாரி டாக்டர் எம்.ரவி, பேராசிரியர் கிருபா சங்கர், சைபர் பாதுகாப்பு நிபுணர் சையத் முகம்மது ஆகியோர் பங்கேற்று, விளக்கமளிக்கின்றனர். இந்த நிகழ்ச்சி, தினமலர் நாளிதழின் பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களிலும், கல்விமலர் இணையதளம் வாயிலாகவும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.