இரு கட்டங்களாக பிளஸ் 2 தேர்வு? ; தமிழகத்துக்கு மத்திய அரசு யோசனை!
மத்திய அரசு தெரிவித்த யோசனையின்படி, பிளஸ் 2 தேர்வை, இரண்டு கட்டங்களாக நடத்துவது குறித்த வழிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளதாக, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.
தலைமை செயலகத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின், மகேஷ் அளித்த பேட்டி:பள்ளி மாணவர்களுக்கான, 'ஆன்லைன்' வகுப்புகளில் எந்த முறைகேடுகளும், விதிமீறல்களும் நடக்காமல் தடுக்கும் வகையில், ஆன்லைன் கல்விக்கு, பல்வேறு விதிமுறைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன. அவை பள்ளிகளுக்கு முன்னரே அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், பள்ளிகளால் சரியாக கடை பிடிக்கப்படாமல் உள்ளது தெரிய வந்துள்ளது.வரும் நாட்களில், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிமுறைகளை சரியாக பின்பற்ற ஆசிரியர்களும், பள்ளிகளும் அறிவுறுத்தப்படுவர். சென்னையில் உள்ள தனியார் பள்ளி மாணவிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.
ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்க, தனியாக குழு அமைக்கப்படும். அதே போல, ஆசிரியைகள் அளிக்கும் புகார்களை விசாரிக்க, 'விசாகா' கமிட்டி அமைக்கப் படும். பிளஸ் 2 தேர்வை, இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு, மத்திய அரசின் கூட்டத்தில், சில யோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, இரண்டு முறை பிளஸ் 2 தேர்வை நடத்துவதற்கான வழிமுறைகளை, தமிழக அரசு தனியாக தயார் செய்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு தொடர்பாக முதல்வரின் ஒப்புதல் பெற்றதும், வழிமுறைகள் அறிவிக்கப்படும். கொரோனா பரவல் முடிந்த பின், பிளஸ் 2 தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் பாதுகாப்பாக தேர்வு மையத்துக்கு வந்து, வீட்டுக்கு செல்லும் வரை, அரசு தரப்பில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். 'நீட்' நுழைவு தேர்வு வேண்டாம் என்பதே, எங்களின் கருத்து. நீட் தேர்வு குறித்து, சட்டசபை கூடி தீர்மானம் நிறைவேற்றும். பள்ளி கல்வி இயக்குனர் நியமனம் தொடர்பாக, நிர்வாக ரீதியாக முதல்வர் எடுத்த முடிவை மாற்ற இயலாது. இவ்வாறு அமைச்சர் கூறினார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.