வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான புதிய வலைதளம் ஜூன் 7 முதல் செயல்படும் எனவும், இந்த வலைதளம் செல்லிடப்பேசிகளிலும் சிறப்பாக செயல்படும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்தத் துறை சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வருமான வரிக் கணக்கை இணையவழியில் தாக்கல் செய்வதற்கு தற்போதுள்ள வலைதளத்துக்கு பதிலாக புதிய வலைதளம் ஜூன் 7-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த வலைதளத்தில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு, வரி செலுத்துவதற்கென பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. செல்லிடப்பேசிகளிலும் சிறப்பாக செயல்படக் கூடிய இந்த வலைதளம் பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் முன்கூட்டியே நிரப்பப்பட்ட வருமானவரிக் கணக்கு படிவத்தையும் கொண்டிருக்கும்.
இதுமட்டுமன்றி வரி சாா்ந்த தேவைகளுக்கு பயனா் கையேடுகள், காணொலிகளுடன் படிப்படியான வழிகாட்டுதல்களைக் கொண்ட செல்லிடப்பேசி செயலியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய வலைதள உருவாக்கத்தையொட்டி, வருமான வரித் துறையின் இணையவழி கணக்குத் தாக்கல் சேவைகள் ஜூன்1 முதல் 6 தேதி வரை செயல்படாது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.