கரோனா பாதிப்பிலும் தமிழகத்தில் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். மேலும் அலைபேசி மூலம் ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றல் செயல்பாடு குறித்து கண்காணித்து வருகின்றனர்.
கரோனா அச்சுறுத்தல் இருந்து வந்ததால் நிகழ் கல்வியாண்டில் ஜூலை மாதம் முதல் 11-ம் வகுப்பு வரை கல்வி தொலைக்காட்சி மூலம், 12-ம் வகுப்புக்கு மட்டும் விடியோ பாடங்கள் மாணவர்களது மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டது. அலைபேசி மூலம் ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றல் செயல்பாடு குறித்துக் கண்காணித்து வந்தனர்.
சற்று கரோனா தொற்று குறைந்தவுடன் 2021 ஜன.19-ம் தேதி முதல் தொடங்கி 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.20-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நேரடி வகுப்புகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பிப்.8-ம் தேதி முதல் மார்ச் 20-ம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடைபெற்றது. தொற்று இரண்டாவது அலை பரவ தொடங்கியதால் மார்ச் 20-ம் தேதியோடு 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.
ஏப்ரல் 16-ம் தேதி முதல் ஏப்,23-ம் தேதி வரை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் செய்முறைத் தேர்வுகள் வழக்கம் போல் பிறபள்ளிகளைச் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களை கொண்டு நடத்தப்பட்டு மதிப்பெண் பட்டியல்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அனைத்து 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் 10 மதிப்பெண்கள் வீதம் மாணவர்களது வருகை, சிறுதேர்வு, அசைன்மெண்ட் ஒப்படைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அகமதீப்பீடு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அவை அனைத்தும் அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அனைத்து சனிக்கிழமை உள்ளிட்ட தொடர்ந்து 3 மாதங்கள் நேரடி வகுப்புகளில் மாணவர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர். தினந்தோறும் மாணவர்களது வெப்பநிலை சோதிக்கப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டு, பள்ளி வளாகங்கள் அடிக்கடி கிருமிநாசினி கொண்டு தூய்மைப் படுத்தப்பட்டு கரோனா தொற்று பரவா வண்ணம் ஆசிரியர்கள் பம்பரமாகச் சுழன்று பணியாற்றி மாணவர்களை பாதுகாத்து கற்பித்தல் பணியை மேற்கொண்டனர்.
இன்றளவும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக அனைத்து நாட்களிலும் நாளொன்றுக்கு ஒரு பாடம் வீதம் அலகுத்தேர்வு வினாத்தாள் வாட்ஸ்-அப் மூலம் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டு விடை எழுதியவுடன் கைபேசியில் போட்டோ எடுத்து சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களின் கைபேசிக்கு அனுப்பப்பட்டு உடனே மதிப்பீடு செய்யப்பட்டு வாரந்தோறும் மதிப்பெண் பட்டியல் மாவட்டக்கல்வி அலுவலரின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. 5 அலகுத்தேர்வுகன் நிறைவடைந்தவுடன் வருகிற ஜூன் மாதம் மூன்று திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு உடனடியாக மதிப்பீடு செய்யப்பட்டு பெற்றோர்களுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்படவுள்ளது.
நாட்டுநலப்பணித்திட்டம், இளஞ்செஞ்சிலுவை சங்கத்தில் தம்மை இணைத்து கொண்டுள்ள ஆசிரியர்கள் முன்களப்பணியாளர்களாகவும், மூன்றும் மாதங்கள் மாணவர்கள் பள்ளிக்கு வந்த போது வெப்ப பரிசோதனை, கிருமிநாசினி வழங்குதல், சமூக இடைவெளியை மாணவர்கள் பின்பற்ற செய்தல் போன்ற பணிகளை உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் மேற்கொண்டனர். மாணவர்கள் நலன் கருதி பிளஸ்டூ அரசு பொதுத்தேர்வை எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்புடன் நடத்த அரசுக்கு உறுதுணையாகச் செயல்படுவோம் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறாக முதல் 6 மாதங்கள் தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் பாடங்களை மாணவர்கள் பார்த்து பயன்பெறுகிறார்களா என கைபேசி மூலம் கண்காணித்தல், 3 மாதங்கள் நேரடி வகுப்புகள், செய்முறைத்தேர்வு தற்போது கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் அலகுத்தேர்வு மற்றும் திருப்புதல் தேர்வு என மாணவர்கள் தொடர்ந்து கற்றல் பணியில் ஈடுபடுவதை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவை அனைத்தையும் கருத்தில் கொள்ளாமல் கடந்த ஓராண்டாக ஆசிரியர்கள் எவரும் பணியாற்றவில்லை என சிலர் தெரிவிப்பது ஆசிரியர்களுக்கு மிகுந்த வேதனையைத் தருவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களும் ஒரு நாள் ஊதியத்தை அளிக்க உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.