ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு?
''நான் கெஞ்சி கேட்கிறேன்; கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து, தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் முழு ஊரடங்கு, மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படும்,'' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம், நேமம் ஊராட்சியில் உள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று சென்றார். கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டார். மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதி குறித்தும் ஆய்வு செய்தார்.பின் அவர் அளித்த பேட்டி:தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை ஒழிக்க, அனைத்து மாவட்ட கலெக்டர்களும் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுதும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட யாரும் தயங்க வேண்டாம்; நானே போட்டுக் கொண்டேன். தடுப்பூசி போடுவதை மக்கள் இயக்கமாக வழிநடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உங்களை கெஞ்சி கேட்கிறேன்; பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து, தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி, தேவைப்பட்டால் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.ஆய்வின்போது, ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன், எம்,பி.,க்கள், பாலு, ஜெயகுமார், எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.