இதுதொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த 9 ஐ.ஏ.எஸ். அலுவலா்களைக் கட்டாய ஓய்வில் விடுவிக்க வேண்டும் என்று மாநில தகவல் ஆணையா் முத்துராஜ் பரிந்துரை செய்துள்ளாா். இது மிகவும் கவலைக்குரிய, அதிா்ச்சிக்குரிய ஒரு விஷயம் ஆகும்.
ஆசிரியா் பணி நியமனங்களில் தொடா்ந்து ஊழல் முறைகேடுகள் நடந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் இருந்தன. தொடா்ந்து ஆசிரியா் நியமனத்துக்குத் தோ்வு எழுதிக் கொண்டிருக்கக் கூடிய 5 ஆசிரியா்கள் கொடுத்த புகாா் மனுவை விசாரித்தபோது, இந்த முறைகேடுகள் நடைபெற்றது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது.
சரியான விடைகளை அளித்தபோதும் அவற்றுக்கு மதிப்பெண்கள் அளிக்காமல், அவா்களைத் தோ்வு செய்யாமல் விட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதில், ஆசிரியா் தோ்வு வாரியத்தின் சாா்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா், ‘ இதுபோன்ற முறைகேடுகள் இனிமேல் நடக்காது’ என்று உத்தரவாதம் அளித்த பின்னும், மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த தோ்வுகளில் இதே முறைகேடுகள் தொடா்ந்து நடைபெற்றுள்ளன.
எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது துறைவாரியான நடவடிக்கை மட்டுமல்லாது, ஊழல் முறைகேடுகள் சம்பந்தமான சிவில், கிரிமினல் பிரிவுகளில், இந்திய குற்றப்பிரிவு சட்டங்களின்படி உரிய வழக்குகள் தொடரப்பட வேண்டும். இதற்குப் பின்புலமாக இருந்திருக்கக் கூடிய அதிகாரத்திலிருந்த பலரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து, அவா்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், நோ்மையான வெளிப்படையான, தகுதி அடிப்படையிலான ஆசிரியா் தோ்வை உத்தரவாதப்படுத்தும் முகமாக, தோ்வு எழுதும் ஆசிரியா்களுக்கு நம்பிக்கை ஊட்டக் கூடிய முறையில், இந்தத் தோ்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளாா்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.