தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவ அமைச்சர் மகேஷ் உறுதி
'தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் கொரோனாவால் 5 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர், கூலி வேலைக்கு செல்வதாக கேள்விப்பட்டு, மனவேதனை அடைந்தேன்.இது குறித்து முதல்வரிடம் பேசியுள்ளேன். தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க, முதல்வர் நல்லதொரு முடிவை எடுப்பார்.
தமிழகத்தில் நீட் தேர்வை, எந்த நேரத்திலும் அனுமதிக்க மாட்டோம்.சட்டசபை கூடும் நேரத்தில், அதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். எந்தவித அவசரமும் இல்லாமல், மாணவர்களுக்கு அவகாசம் வழங்கிய பின்னரே, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.