2 கட்டங்களாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு?
கொரோனா பரவல் எதிரொலியால் தள்ளிப்போன சிபிஎஸ் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 2 கட்டங்களாக நடத்த மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்துவது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று (மே 23) ஆலோசனையில் ஈடுபட்டார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ் பொக்ரியால், ‛சிபிஎஸ்இ தேர்வு நடத்துவது தொடர்பான முடிவை வரும் ஜூன் 1ம் தேதிக்குள் அறிவிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடத்த மத்திய கல்வியமைச்சகம் ஆலோசித்து வருகிறது. மத்திய கல்வித்துறையின் வரைவு அட்டவணைப்படி, முதற்கட்டமாக ஜூலை 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்கி ஆகஸ்ட் 20-ம் தேதி வரையிலும் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. முதல் கட்ட தேர்வில் பங்கேற்க இயலாத மாணவர்களுக்கு இரண்டாம் கட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.