நீண்ட நேர ஆன்லைன் வகுப்புகள்; பிரதமரிடம் புகாரளித்த 6 வயது சிறுமி
காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி, நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடப்பதாகவும், குழந்தைகளுக்கு நிறைய வேலை கொடுப்பதாகவும் பிரதமர் மோடியிடம் புகாரளித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கோவிட் தொற்று பரவலால் உலகெங்கிலும் உள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது பலருக்கும் அன்றாட வாழ்க்கை நடைமுறையில் இருந்து பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பள்ளி, கல்லூரிகள் மூடியதால், குழந்தைகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி, நீண்ட நேர ஆன்லைன் வகுப்புகளால் விரக்தியடைந்து பிரதமர் மோடியிடம் புகாரளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வெறும் 45 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் சிறுமி பேசியதாவது: எனது ஆன்லைன் வகுப்புகள் காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 2 மணி வரை தொடர்கிறது. ஆங்கிலம், கணிதம், உருது மற்றும் சுற்றுச்சூழல் கல்வி அதன்பின்னர் கணினி வகுப்பும் உள்ளது. குழந்தைகளுக்கு நிறைய வேலை இருக்கிறது. சிறிய குழந்தைகள் ஏன் இவ்வளவு வேலைகளை சமாளிக்க வேண்டும்?. என்ன செய்ய முடியும் மோடி ஐயா?. இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
டுவிட்டரில் இந்த வீடியோவை 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர், 5 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.