சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் இணையவகுப்பில் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி, அரைகுறை ஆடையுடன் தோன்றி சில்மிஷம் செய்த நிலையில், தற்போது அவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி நிர்வாகம் மற்றும் பல ஆசிரியர்களிடம் தொடர் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில், ஆன்லைன் வழியில் வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் அதனை பதிவு (Record) செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் வகுப்பு விடீயோக்களை அவ்வப்போது பெற்றோர் ஆசியர் சங்கத்தின் மூலமாக கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்கள் கண்ணியம் தவறும் வகையில் நடந்துகொள்ளும் பட்சத்தில், அவர்களின் மீது கட்டாயம் போக்ஸோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மாணவ - மணாவிகள் புகார்கள் அளிக்கும் வகையில் சிறப்பு இலவச உதவி எண்கள் விரைவில் உருவாக்கி, அது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாணவிக்கு ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளி இயக்குநருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 31ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன்பு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.