தமிழகத்தில் திமுக தேர்தல் வாக்குறுதிகளில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு குறித்து சமூக வலைதளங்களில் பதிவாகி வரும் வதந்திகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அது குறித்து தற்போது வரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் குடும்பத் தலைவருக்கு பதிலாக குடும்பத் தலைவி இருக்கும் ரேஷன் அட்டைகளுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. மேலும் PHH மற்றும் PHH-AAY என்ற இரு வகையான ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளும் மற்றும் குடும்பத் தலைவராக பெண்ணின் புகைப்படம் இருந்தால் மட்டுமே உரிமைத்தொகை வழங்கப்படும் என சில வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
அவற்றை நம்பி பலர் ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய விண்ணப்பித்து வருகின்றனர். தூத்துக்குடியில் கடந்த ஒரு மாதத்தில் 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர், ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளனர். இதற்காக, வட்டார வழங்கல் அலுவலர் அலுவலகம் மட்டுமின்றி இ-சேவை மையங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. குடும்பத் தலைவரின் புகைப்படம் மட்டுமின்றி, ரேஷன் அட்டைகளின் வகைகளை மாற்றவும், பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனை சாதகமாக பயன்படுத்தி இடைத்தரகர்கள் மூலமாக பல மோசடிகளும் நடந்துள்ளது. சிலர் குடும்பத் தலைவர்களை மாற்றம் செய்தால் வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட பிற ஆவணங்களை பெற சிக்கல் ஏற்படும் என தெரிவிக்கின்றனர். மேலும் அதிகாரிகள் கூறுகையில், குடும்பத் தலைவிகளுக்கான உதவித்தொகை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. எனவே பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் திட்டம் தொடர்பாக ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க, அரசு முறையான அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது என தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.