நகைக்கடன் தள்ளுபடி
தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையின் போது தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் மாநில மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்டவைகள் தங்க நகைகளுக்கான கடன்களை குறைந்த வட்டியுடன் அளிக்கின்றன.
இதன் மூலம் விவசாயிகள் அதிகம் பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் தேர்தலுக்கு முன்னாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் விவசாய கடன், விவசாய நகைக்கடன், குழுக்கடன் ஆகியவை முந்தய அரசால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், விவசாயிகள் பெற்ற கடன்களுக்கு சான்றிதழையும் வழங்கியது. ஆனால், கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகைக்கான கடன்களை தள்ளுபடி செய்வது குறித்த அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில் அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் 2018 -19, 2019 -20 மற்றும் 2020 -2021 உள்ளிட்ட நிதியாண்டில் வழங்கப்பட்ட நகைக்கடன்களுக்கான விவரங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை தெரிவித்திருந்தது. இதற்கிடையில் தமிழகத்தில் தற்போது நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்வது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.