ஆயுள் காப்பீடு முகவர்:
தமிழகம் முழுவதும் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ளது. இதனால் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்பி வந்தாலும் தொழில்துறைகள் முழுவீச்சில் இயங்க தொடங்கவில்லை. இதன் விளைவாக பலரும் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை அஞ்சல் அஞ்சல் கோட்டத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீட்டு ஆகிய பணிகளுக்கு நேரடி முகவர்களை தேர்வு செய்வதற்கு வருகிற ஜூலை 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வானது ஏற்கனவே மே 27ம் தேதி நடைபெற இருந்த நிலையில், கொரோனா நோய்த்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் ஒத்திவைக்கப்பட்டது. கோவை தலைமை தபால் நிலையம், கூட்ஷெட் ரோட்டில் உள்ள கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்த தேர்வானது நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்ப படிவம் அனைத்து தபால் நிலையங்களிலும் இலவசமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் docoimbatore.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணிக்கு குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 50 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவம், 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2, பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் ஜூலை 15ம் தேதி காலை 10 மணிக்கு நேரில் வருகை புரிய வேண்டும். இந்த பணிகளுக்கு கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு 0422 255 8541 என்ற எண்ணில் டயல் செய்யலாம்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.