சிபிஎஸ்சி தனித்தேர்வர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் எழுத்து தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்சி தேர்வாணையம் தகவல் ஒன்றினை தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் மாணவர்களின் மேற்படிப்பினை கருத்தில் கொண்டு விரைவாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா என்ற நோய் நாட்டில் பரவி வருகிறது. இதனால் தற்போது வரை மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். பரவலை கட்டுப்படுத்த அரசு சார்பில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், முதற்கட்டமாக கடந்த ஆண்டு முதல் பல மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் காலவரையறை இன்றி மூடப்பட்டது. இதனை அடுத்து பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதில் சிபிஎஸ்சியில் படிக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.
இதனை அடுத்து மாதாந்திர பரீட்சைகள் போன்றவற்றில் மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் வழங்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்து இருந்தது. இப்படியாக இருக்க, சிபிஎஸ்சியில் படிக்கும் தனி தேர்வர்களுக்கு எப்படி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்த மனு ஒன்றும் உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. இப்படியாக இருக்க, தற்போது சிபிஎஸ்சி தேர்வாணையம் இது குறித்த அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது
அதில் வரும் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை தனி தேர்வர்களுக்கு நேரடியாக தேர்வுகள் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்சியில் தனி தேர்வர்களாக இருக்கும் மாணவர்கள் அனைவரும் முந்தைய ஆண்டுகளில் பாஸ் ஆகாத மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் நேரடியாக தேர்வுகளை எழுதியதும், அவர்களது மேற்படிப்பினை கருத்தில் கொண்டு விரைவாக ரிசல்ட் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சிபிஎஸ்சியில் படிக்கும் 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.