மணத்தக்காளி என்றாலே மருத்துவ பயன்களுக்கு பஞ்சாமிருகாது. இதன் இலைகள் வாய்ப்புண் மட்டுமின்றி வயிற்றுப்புண்ணையும் குணமாக்கும் வல்லமை படைத்ததாக உள்ளது. மலச்சிக்கல், கல்லீரல் பிரச்சனைகள், சரும அலர்ஜி, வெயில் கட்டி, கை கால் வலி, காய்ச்சல் என அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகின்றன.
இப்படிப்பட்ட மணத் தக்காளியின் காயில் எப்படி குழம்பு செய்வது என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி காய் - 100 கிராம்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2 (நடுவில் கீறியது)
கரறிவேப்பிலை - தேவையான அளவு
பூண்டு - 10
தக்காளி - 1 பெரிய அளவு
மிளகாய் தூள் - 4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
காய்ந்த வெந்தய இலைகள் அல்லது கஸ்த்தூரி மெந்தி இலைகள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் ஒரு குழம்பு வைக்கும் பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
பிறகு அவற்றோடு கடுகு, வெந்தயம் இடவும். அவை பொரிந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் பூண்டு தக்காளி சேர்த்து மீண்டும் வதக்கவும்.
இபோது சுத்தமான நீரில் அலசி வைத்துள்ள மணத்தக்காளி காயை எடுத்து அவற்றோடு சேர்க்கவும். தொடர்ந்து வதக்கிய பிறகு அவற்றோடு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
அதன் பின்னர், புளி கரைசலை சேர்த்து அதன் மீது காய்ந்த வெந்தய இலைகளை தூவி விடவும். பாத்திரத்தை ஒரு மூடியால் மூடி 5 நிமிடங்களுக்கு குழம்பை கொதிக்க வேண்டும். பிறகு திறந்து பார்த்தல் மணத்தக்காளி காய் காரா குழம்பு தயராக இருக்கும்.
இப்போது அவற்றை உங்கள் உணவோடு சேர்த்து பரிமாறி ருசிக்கவும். இவற்றுக்கு தேங்காய் சேர்க்க தேவையில்லை. அவை சேர்க்காமலே ருசியாக இருக்கும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.