பிளஸ் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெறஇருந்தது. இந்நிலையில் கரோனா 2-வது அலை பரவலின் தீவிரம் காரணமாக பிளஸ் 2 தேர்வு ரத்துசெய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து 10, 11-ம் வகுப்புகளின் பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு அடிப்படையில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் கணக்கிட்டு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. தொடர்ந்துபிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டதை அடுத்து மாணவர்களின் 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 70 சதவீதம், 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்றளவில் இறுதி மதிப்பெண் கணக்கிட்டு வழங்க முடிவானது.
பணிகள் முடிவடைந்தன
அதற்கேற்ப நடப்பாண்டு தேர்வெழுத விண்ணப்பித்த 8.6 லட்சம்மாணவர்களின் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் விவரங்கள் சேகரிக்கப்பட்டு இறுதி மதிப்பெண் கணக்கிடும் பணிகள் முடிந்துவிட்டன.
மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழக அரசின் ஒப்புதல் பெற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.
மேலும், 10, 12-ம் மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்அச்சிடும் பணிகளை ஒரு வாரத்துக்குள் முடித்து, சான்றிதழ் வழங்கவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.