ஒற்றைத் தலைவலி சிலருக்கு பரம்பரையாகவே தோன்றும். வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பிரச்சனைகள். பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் பாதிப்புகளினால் அதிகமாக ஒற்றைத்தலைவலி தோன்றும்.
ஒற்றைத் தலைவலி பரம்பரையாகவும், பணி சூழல், உணவு முறைகளாலும் ஏற்படக்கூடியது. ஆண்களை விட பெண்களே அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள். ஒற்றைத் தலைவலியில் கண் நரம்பு ஒற்றைத் தலைவலி, பக்கவாத ஒற்றைத் தலைவலி, முக நரம்பு ஒற்றைத் தலைவலி என வகைகள் உண்டு.
ஒற்றை தலைவலி வந்தவுடன் சிலருக்கு வாந்தி உண்டாகும். படபடப்பு, அதிக களைப்பு, பசியின்மை ஏற்படும். மூக்கிலிருந்து நீர் கசியும். அதிக மன அழுத்தத்துடன் காணப் படுவார்கள்.
லேசான தலைவலியுடன் ஆரம்பித்து தீவிர தலைவலியாக தொடர்ந்து நீடிக்கும் சிலருக்கு 72 மணி நேரம் கூட தொடர்ந்து நீடிக்கும்.
நல்லெண்ணெய் 100 மிலியுடன் 5 மிலி குப்பைமேனி சாறு கலந்து காய்ச்சி வடிகட்டி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வர ஒற்றைத்தலை வலி குணமாகும்.
நல்லெண்ணெய் கால் லிட்டரில் கருஞ்சீரகப்பொடி 50 கிராம், நெய் 10 கிராம், எலுமிச்சை சாறு 10 மிலி, வெற்றிலைச்சாறு 10 மிலி கலந்து நன்றாக காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு ஒருநாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வர ஒற்றைத்தலை வலி குணமாகும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.