ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத வர்களே இல்லை என்கிற நிலையை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம். கூடவே, ஸ்மார்ட்போனை 100 சதவிகிதம் சரியாகப் பயன்படுத்துபவர்கள் இல்லை என்ற நிலையும் தொடர்கிறது. ஸ்மார்ட் போன் விஷயத்தில் நாம் பொதுவாகச் செய்யும் தவறுகளைப் பார்க்கலாம். இதில் ஒன்றையாவது நீங்களும் செய்வீர்கள் என்கிறார்கள் டெக் வல்லுநர்கள்.
சூடாகக் கூடாது: மொபைலை ஜன்னல் ஓரமாகவோ, சூரிய ஒளி நேரிடையாகப் படும் இடத்திலோ வைப்பது தவறு. இதனால் மொபைல் சூடாகும். கார் டேஷ் போர்டில் நீண்ட நேரம் வைக்கும்போதும் மொபைல் சூடாகக்கூடும். சூடாவதால் கண்ணுக்குத் தெரியும்படி மொபைலுக்கு எந்தப் பிரச்னையும் வராது. ஆனால், உள்ளிருக்கும் ‘சிப்’ போன்ற பல பகுதிகள் பாதிக்கப்படலாம். இதனால் மொபைலின் ஆயுளும் குறையும், உதிரிபாகங்கள் பழுதாகி செலவும் வரும்.
அப்டேட்டை மறக்கக் கூடாது: மென் பொருள்களைப் பொறுத்தவரை அப்டேட் என்றால், இருக்கும் பிரச்னைக்கு ஒரு தீர்வு வருகிறதென்பதுதான் பொதுவான அர்த்தம். புது வசதிகளுக்காக வரும் அப்டேட்களைவிட இருக்கும் பிரச்னை களுக்கான தீர்வுகள்தான் அதிகம் வரும். அப்டேட்களில் மூன்று வகைகள் உண்டு. ஆப்ஸ் அப்டேட், செக்யூரிட்டி பேட்ச் அப்டேட், சிஸ்டம் அப்டேட். இதில் ஆப்ஸ் மற்றும் செக்யூரிட்டி பேட்ச் அப்டேட் வந்தால் உடனே அதை ஏற்று அப்டேட் செய்துவிடுங்கள். சிஸ்டம் அப்டேட் வந்தால் மட்டும் அதற்கான மெமரி ஸ்பேஸ் உங்கள் மொபைலில் இருக்கிறதா என்பதைப் பார்த்துவிட்டு, மொபைலை பேக்கப் எடுத்துவிட்டு அதன் பின் அப்டேட் செய்யுங்கள். ஆனால், எந்த அப்டேட் என்றாலும் அதை ஏற்காமல் விடாதீர்கள்.
ஹாய் திருடா: திருடப்படும் பெரும்பாலான மொபைல்கள், அவற்றின் உரிமையாளர் களுடைய கைகளில் இருக்கும்போதேதான் திருடப்படுகின்றன என்றால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மை. நடந்து செல்லும் போது, பைக்கில் பின்னால் அமர்ந்து செல்லும்போது என எப்போதும் ஒரு கையால் மொபைலைப் பிடித்தபடி எதையாவது பார்த்துக்கொண்டிருப்போம். இப்படி கவனமின்றிப் பிடித்துக்கொண்டிருக்கும் மொபைலைப் பறிப்பது எளிதென்பதால் திருடர்கள் கவனம் மொபைல் பக்கம் திரும்பி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மொபைல் பயன்படுத்துங்கள். ஆனால் எங்கே, ஏன், எப்படி என்பதில் கவனமாக இருங்கள்.
சார்ஜிங்: குயிக் சார்ஜிங், பவர் சார்ஜிங் என ஏகப்பட்ட சார்ஜிங் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. ஆனால், அடிப்படை மாற வில்லை. ஒவ்வொரு பேட்டரிக்கும் இத்தனை சுழற்சிகள்தான் சார்ஜ் ஆகும் என்ற திறன் உண்டு. உதாரணமாக, ஒரு பேட்டரியை 1000 முறை சார்ஜ் செய்யலாம் என்றால் அதன் பின் அதன் திறன் குறையத் தொடங்கும். எனவே சார்ஜ் செய்தால் முழுமையாகச் செய்துவிடுங்கள். 70% எடுத்துவிடுவது, பின் மீண்டும் 40% ஆனாலே சார்ஜ் செய்வது போன்றவற்றைத் தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம். 10% ஆக குறைந்த பின் சார்ஜ் செய்வதும், 95% சார்ஜ் ஆனதும் எடுத்து விடுவதும் பேட்டரியின் ஆயுளை அதிகரிக்க உதவும். ஒரிஜினல் சார்ஜர் இன்றி மற்ற கேபிள் மூலம் சார்ஜ் செய்வதையும் தவிர்க்கலாம்..
லொகேஷன் & ப்ளூடூத்:
பெரும்பாலானோர் எப்போதுமே ப்ளூடூத் மற்றும் லொகேஷனை ஆன் செய்தே வைத்திருப்பார்கள். இதனால் சார்ஜ் வேகமாகக் குறையும். அதனால் பிரச்னை ஏது மில்லை. ஆனால், நமக்கே தெரியாமல் பல ஆப்ஸ் லொகேஷனை டிராக் செய்து கொண்டேயிருக்கும். அது பிரைவஸி பிரச்னையில் முடியலாம். போலவே, ப்ளூடூத் மூலம் மால்வேர் ஏதேனும் நம் மொபைலைத் தாக்கலாம். எனவே, லொகேஷன் மற்றும் ப்ளூடூத்தை வேண்டியபோது பயன்படுத்திவிட்டு ஆஃப் செய்வது நல்லது.
பிரைவேட் படங்கள்:
மொபைல் லாக் செய்து வைத்திருந்தாலும் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப் படங்களை மொபைலில் வைத் திருக்க வேண்டாம். அவற்றை மின்னஞ்சலுக்கு அனுப்பிக் கொள்ளலாம் அல்லது கணினி யில் பேக்கப் செய்து கொள்ள லாம். மொபைலில் அவற்றை வைத்திருப்பது பாதுகாப் பானதல்ல. திடீரென ஸ்கிரீன் போய்விட்டால் அதைச் சரி செய்ய சர்வீஸ் சென்டரில் மொபைலைக் கொடுக்க வேண்டி வரலாம். அப்போது அந்தப் படங்கள் மூன்றாம் நபர் பார்வைக்கும் செல்லக் கூடும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.