பெகாசஸ் ஸ்பைவேர் எப்படி உளவு பார்க்கிறது?
பெகாசஸ் என்னும் உளவு மென்பொருள் மூலமாக பல அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களை உளவு பார்த்ததாக வெளியான குற்றச்சாட்டுகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தொழில்நுட்ப வல்லுநர்களே இந்த ஸ்பைவேர்-ஐ எப்படி அழிப்பது எனத் தெரியாமல் கதிக்கலங்கி போகின்றனர். அப்படி அந்த ஸ்பைவேர் எப்படி வேலை செய்கிறது, அதனால் வரும் ஆபத்துகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்...
இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ குழுமம் பெகாசஸ் ஸ்பைவேர் என்ற மென்பொருளைத் தயாரித்துள்ளது. இதனை பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது அந்நிறுவனம். ஸ்பைவேர் என்பது ஒருவருக்கு தெரியாமல் அவரை உளவுப் பார்க்கக்கூடிய மென்பொருளாகும். இந்த ஸ்பைவேர் ஒருவரது ஸ்மார்ட்போனில் புகுந்து, அவரின் தகவல்கள் அனைத்தையும் பயனர்களின் அனுமதி இல்லாமல் எடுப்பதுடன், அவர்களின் அனைத்து போன் கால்கள், செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்கவும் செய்கிறது. அதாவது உங்கள் போனில் பெகாசஸ் ஸ்பைவேர் நிர்வகிக்கப்பட்டால், அந்த சாதனம் 24 மணிநேரமும் உங்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் சாதனமாக மாறுகிறது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை இந்த ஸ்பைவேர் தாக்குகிறது. தற்போது வரை ஐபோன்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. துவக்கத்தில் இ-மெயில் அல்லது மெசேஜ் மூலமாக தவறான ஒரு லிங்கை அனுப்பி, அதனை பயனர்கள் க்ளிக் செய்வது மூலம் இந்த ஸ்பைவேரை மொபைலில் புகுத்திவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது ஜீரோ க்ளிக் அட்டாக் (zero click attack) எனப்படும் முறையில் ஹேக்கர்கள் வடிவமைத்துள்ளனர். அதாவது ஸ்பைவேர் அடங்கிய லிங்க்-ஐ க்ளிக் செய்யாமலேயே உங்கள் மொபைலில் நிர்வகித்து தகவல்களைப் பார்க்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப், ஐமெசேஜ் மற்றும் எஸ்.எம்.எஸ் போன்ற செயலிகளில் இருக்கும் பக் எனப்படும் பலவீனமாக சாத்தியக் கூறுகளை பயன்படுத்தி உள்ளே நுழையும் இந்த ஸ்பைவேர் எந்த ஒரு சந்தேகத்தையும் ஏற்படுத்தாத வகையில் மிகவும் அமைதியாக செயல்படும். மிகவும் குறைவான பேட்டரி திறனை செலவு செய்வதால், பயனர்களுக்கு தங்களின் போன் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதை உணர்வதே கடினமாக உள்ளது. மொபைல் கேமரா, மைக், ஜிபிஎஸ் உள்ளிட்டவைகளை பயனர்களின் அனுமதி இல்லாமலேயே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும் இந்த ஸ்பைவேர், நமது இருப்பிட தகவல்கள், நடவடிக்கைகள், என்க்ரிப்ட் செய்யப்பட்ட செய்திகளை கூட பார்த்து சேகரிக்கிறது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.