12ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
மேலும், 12ஆம் வகுப்பு மாணவர்களின் செல்லிடப்பேசி எண்களுக்கே அவர்கள் பெற்ற மதிப்பெண் பட்டியல் அனுப்பி வைக்க ஏற்பாடு சய்யப்பட்டுள்ளதாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
எனவே, தங்களது மதிப்பெண்களை அறிந்து கொள்ள கிராமப்புற மாணவர்கள், எங்கும் அலைய வேண்டியதில்லை. அவர்கள் பள்ளியில் அளித்த செல்லிடப்பேசி எண்ணுக்கே மதிப்பெண் விவரங்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில் பள்ளி மாணவா்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து இணையதளங்களில் மதிப்பெண்களுடன் கூடிய தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
குறுஞ்செய்தி அனுப்பப்படும்: மாணவா்கள், பள்ளிகளில் சமா்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தியாகவும் தோ்வு முடிவு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஜூலை 22-இல் பதிவிறக்கம்: மேலும், பள்ளி மாணவா்கள் ஜூலை 22-ஆம் தேதி காலை 11 மணி முதல் இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலைத் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.