எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்களை குறிவைக்கும் மோசடி பேர்வழிகள்
கொரோனா பாதிப்புகளுக்கு பின், 'ஆன்லைன்' மோசடிகள் அதிகரிக்க துவங்கி உள்ளன. குறிப்பாக, வங்கி கணக்கு குறித்த தகவல்களை பெற்று, பணத்தை அபகரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இத்தகைய மோசடி முயற்சிகளை, தங்கள் வாடிக்கையாளர்களும் சந்திப்பதாக எஸ்.பி.ஐ., வங்கி ஒப்புக்கொண்டு, எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
எஸ்.பி.ஐ., வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு, மோசடி நபர்கள், தனிப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து, ''கே.ஒய்.சி., சம்பந்தமாக உங்களுடைய எஸ்.பி.ஐ., கணக்கு எண் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. ''கே.ஒய்.சி., தகவல்களை பூர்த்தி செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்,'' என செய்தி அனுப்புகிறார்கள். இதை நம்பி இறங்கியவர்கள், தங்களுடைய தகவல்களை தெரிவித்து, பணத்தை பறிகொடுத்து விடுகிறார்கள்.
இந்நிலையில் எஸ்.பி.ஐ., வங்கி, ''கே.ஒய்.சி., மோசடி உண்மையானது. அது நாடு முழுதும் அதிகரித்துள்ளது; எச்சரிக்கையாக இருக்கவும். வங்கி எந்த இணைப்பையும் அனுப்புவதில்லை,'' என தெரிவித்துள்ளது. மேலும், இத்தகைய மோசடிகள் குறித்து cybercrime.gov.in எனும் இணயத்தில் புகார் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டு உள்ளது. மின்னஞ்சல் வாயிலாக மோசடிக்கு முயற்சித்தால், report.phishing@sbi.co.in. எனும் முகவரியில் புகார் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.