நாடு முழுவதும் அனைவரும் தங்களின் ஆதார் எண்ணை, பான் கார்டு உடன் இணைப்பதற்கு மத்திய அரசு செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், SBI வங்கி தனது வாடிக்கையாளர்களை அறிவுறுத்தி உள்ளது.
SBI அறிவிப்பு:
ஆதார் மற்றும் பான் அட்டையை இணைப்பதற்கு இதற்கு முன்னர் மத்திய அரசு பல முறை அவகாசம் அளித்துள்ள நிலையில், கொரோனா தொற்று நோயை கருத்தில் கொண்டு இதற்கு மேலும் செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் இதுவரை பான் மற்றும் ஆதார் அட்டையை இணைக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு தங்கள் பான் கார்டை ஆதார் உடன் இணைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இதனால் அவர்கள் ஆன்லைன் வங்கி மற்றும் பிற சேவைகளை தடையின்றி அனுபவிக்க முடியும் என்று அறிவித்துள்ளது. மேலும், ‘வங்கி சேவையில் எந்தவொரு அசவுகரியத்தை தவிர்க்கவும், தொடர்ந்து வங்கி சேவைகளை பெறுவதற்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் பான் கார்டை ஆதார் உடன் இணைக்க அறிவுறுத்துகிறோம்’ என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது
மேலும், ஆதாருடன் பான் எண்ணை இணைக்கவில்லை என்றால் பான் அட்டை செயல்படாது என்றும், வருமான வரி அறிக்கையை (ஐடிஆர்) தாக்கல் செய்யவோ அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தவோ முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கு வருமான வரித்துறையின் அதிகாரபூர்வ தளமான www.incometaxindiaefiling.gov.in க்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.