ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் !! – தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகள் !!
கொரோனா ஊரடங்கு :
கொரோனா வைரஸின் பரவலினால் கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் காரணமாக அனைத்து பணிகளும் முடங்கி விட்டது. மேலும் அரசு அலுவலகம் மட்டுமில்லாது அனைத்து துறை செயல்பாடுகளும் நின்று விட்டது. அவற்றோடு பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டு இருந்தது. அதன் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது
அவற்றோடு தொழில்துறை உட்பட நாட்டின் அனைத்து துறைகளும் முடங்கி விட்டதால் பொருளாதாரமும் பெருமளவு பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் சிறிது சிறிதாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல் வாழ்க்கைக்கு திரும்பினாலும், கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நோய்த் தொற்றின் தீவிரத்தில் ஏற்பட்ட குறைவினால் ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது
ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் !!
தற்போது தமிழகத்தில் உள்ள தளர்வுகளுடன் கூடுதல் தளர்வுகள் அளித்து ஊரடங்கை வரும் 31.07.2021 அன்று வரை தமிழக அரசு நீட்டித்து உள்ளது. அதில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகங்கள் விநியோகம் உள்ளிட்ட பணிகள் தொய்வின்றி நடைபெற ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தொழிற்பயிற்சி நிலையங்கள், தட்டச்சு பயிற்சி நிலையங்கள் உள்ளிட்டவற்றை கொரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களுடன் 50% மாணவர்களோடு சுழற்சி முறையில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.