மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கொவிட்-19 தொடர்பான கேள்விகள், குறைகள் மற்றும் கல்வித் சார்ந்த இதர விஷயங்களைக் கண்காணிக்க பல்கலைக்கழக மானியக் குழு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு, தேர்வுகள் மற்றும் கல்வி நாள்காட்டி தொடர்பான வழிகாட்டுதல்களை 29 ஏப்ரல், 2020 அன்று பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, வழிகாட்டுதல்களை அமல்படுத்திப் பின்பற்றும் அதே வேளையில், அனைத்து பங்குதாரர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, தொடர்புடைய அனைவரின் சுகாதாரத்துக்கு உச்சபட்ச முன்னுரிமை அளித்து கல்வி செய்ல்பாடுகளை திட்டமிடுமாறு அனைத்து பல்கலைக்கழங்களும் அறிவுறுத்தப்பட்டன.
பெருந்தொற்றின் காரணமாக ஏற்படும் தேர்வுகள் மற்றும் இதர கல்விச் செயல்பாடுகள் குறித்த மாணவர்களின் குறைகளைக் கையாள ஒரு பிரிவை ஏற்படுத்துமாறும், அது குறித்து மாணவர்களுக்குத் தகவல் தெரிவிக்குமாறும் பல்கலைக்கழகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன.
மேலும், கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிடையே ஏற்பட்டுள்ள கேள்விகள், குறைகள் மற்றும் கல்வித் சார்ந்த இதர விஷயங்களைக் கண்காணிக்க பல்கலைக்கழக மானியக் குழு கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது:
1. 011-23236374 என்ற பிரத்யேக உதவி எண் தொடங்கப்பட்டுள்ளது.
2. covid19help.ugc@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது.
3. மாணவர்களின் குறைகளைக் களைவதற்காக ஏற்கனவே உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் https://www.ugc.ac.in/grievance/student_reg.aspx என்ற வலைதளத்திலும் மாணவர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்யலாம்.
4. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கவலைகள்/குறைகளைக் கண்காணித்து அவற்றுக்குத் தீர்வு காண பல்கலைக்கழக மானியக் குழுவில் ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொது அறிவிப்பின் ஒரு நகலை தங்கள் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் பதிவேற்றி, மின்னஞ்சல் மற்றும் இதர டிஜிட்டல் ஊடகம் மூலமாக இதை ஆசிரியர் மற்றும் மாணவர் சமூகங்களிடையே பகிருமாறு அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.