'குரூப் -1' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு பிரதான தேர்வு தேதியும் அறிவிப்பு
துணை கலெக்டர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கான, 'குரூப் - 1' தேர்வு முடிவுகளை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளில், 66 காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியே, 'குரூப் -1' தேர்வு நடத்தப்பட்டது.மாநிலம் முழுதும், 153 தேர்வு மையங்களில், ஜன.,3ல் நடந்த தேர்வில், 1.31 லட்சம் பேர் பங்கேற்றனர்.இதையடுத்து, விடைத்தாள்கள் கணினி வழியில் திருத்தப்பட்டு, நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
ஒரு பதவிக்கு, 50 பேர் வீதம் தேர்ச்சி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.தேர்வு எழுதியவர்களின், மதிப்பெண் அடிப்படையிலான தர வரிசையில், முன்னணியில் உள்ள, 3,752 பேர் பிரதான தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு, மே, 28 முதல் 30 வரை, பிரதான தேர்வு நடத்தப்படுகிறது.
தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்றவர்கள் பிரதான தேர்வை எழுத, வரும் 16ம் தேதி முதல், மார்ச் 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.