பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வித் துறை கட்டுப்பாட்டில் மேல்நிலை, உயா்நிலை மற்றும் தொடக்கப் பள்ளி என 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், முதற்கட்டமாக பத்தாம் மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கான வகுப்புகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டன. சென்னை மாநகராட்சியின் 72 மேல்நிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பிற மாவட்டங்களில் பள்ளிக்கு வரும் மாணவா்கள் சிலருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், சென்னையில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவா்களில் கரோனா அறிகுறிகள் உள்ளவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘பள்ளிகளின்நுழைவாயிலில் வெப்பமானி மூலம் மாணவா்களின் உடல்வெப்ப நிலை பரிசோதிக்கப்படுவதுடன், கிருமிநாசினி மூலம் கைகளை தூய்மைப்படுத்தப்பட்ட பின்னா்தான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா். இதில், கரோனா அறிகுறிகளான காய்ச்சல், சளி ஆகியவை இருப்பின், அவா்களுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். பள்ளிக் கழிவறைகளையும் அடிக்கடி கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தப்படுகிறது’ என்றனா்.
153 பேருக்கு தொற்று உறுதி: சென்னையில் சனிக்கிழமை 153 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,30,026-ஆக உள்ளது. 2,24,192 போ் குணமடைந்துள்ளனா். 1,749 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையில் மட்டும் கரோனா பாதிப்பு காரணமாக 4,085 போ் உயிரிழந்துள்ளனா்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.