ஆள் மாறாட்டத்தை தடுக்க முயற்சி டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் மாற்றம்
அரசு வேலைக்கான போட்டி தேர்வில் ஆள் மாறாட்டத்தை தடுக்கும் வகையில், ஆதார் அடிப்படையிலான, 'பயோ மெட்ரிக்' பதிவுகளை மேற்கொள்ள, டி.என்.பி.எஸ்.சி., திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில், புதிய பணியாளர்கள் மற்றும் அலுவலர்களை நியமிக்கும் வகையில், போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும் இந்த தேர்வுகளில், பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.துறை தேர்வுகள், இன்ஜினியரிங் பணி தேர்வுகள், குரூப் - -4, குரூப் - 2, குரூப் - 1 தேர்வுகள் என, பல்வேறு தேர்வுகளை, டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது. இந்த தேர்வுகளில், சில நேரங்களில் விதி மீறல் மற்றும் முறைகேடுகளும் நடந்து விடுகின்றன.
இந்நிலையில், ஆள் மாறாட்டத்தை தடுக்கும் வகையில், போட்டி தேர்வு மையங்களில், ஆதார் அடிப்படையில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு அமல்படுத்தப்பட உள்ளது.இதற்கான கருத்துருக்கு, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதனால், பயோமெட்ரிக் வருகைப்பதிவு பணியை, மேற்கொள்ளும் நிறுவனத்தை தேர்வு செய்வது துவங்கியுள்ளது.மார்ச்சுக்கு பின் நடக்கும் தேர்வுகளில், ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமலுக்கு வரும் என, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.