தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. தொற்று பரவல் குறைந்தையடுத்து கடந்த ஜனவரி 19 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
பொதுத்தேர்வு நடைபெறும் தேதி எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், தமிழக அரசு பொதுதேர்வுக்கான கால அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, வரும் மே மாதம் 3 ஆம் தேதி துவங்கும் பொதுத்தேர்வு 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதில் எந்த குழப்பமும் இல்லை. பொதுத்தேர்வு அட்டவணையை தயாராக வைத்திருந்தோம். தேசிய திறனாய்வு தேர்வு கட்டணத்தை அரசே செலுத்துவது குறித்து, முதல்வருடன் வரும் 23-ம் தேதி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை பொறுத்தே தேர்வு தேதி அறிவிக்கப்படும் என கூறியது பற்றிய கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.