பிளஸ் 2 தேர்வு: மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை
இந்தாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு தொடர்பாக அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் மகேஷ் பொய்யாமொழி , செயலாளர் தீரஜ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
சி.பி.எஸ்.இ., மற்றும் பல மாநில கல்வி வாரியங்கள், கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளன. பிளஸ் 2 வகுப்பு தேர்வு தள்ளி வைக்கப் பட்டு உள்ளது. அதுபோல, உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப் பட்டு உள்ளன. மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் பாதுகாப்பு உட்பட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, பிளஸ் 2 தேர்வு நடத்துவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக, மத்திய கல்வி அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பி இருந்தது.
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு மற்றும் உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்து, இன்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்கள், செயலர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜாவேத்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தின் சார்பில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் செயலாளர் தீரஜ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாநில அரசுகள் தெரிவிக்கும் கருத்துகள் அடிப்படையில், பிளஸ் 2 தேர்வை நடத்துவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.